10b. தருமகோபன் வீழ்ச்சி

“முடியுமானால் காத்துக் கொள்வாய் !”
முடிவாகக் கூறினான் தருமகோபன்!

தருமகோபன் எய்த கூரிய அம்புகளோ
தருமசங்கடத்தை ஏற்படுத்தின அங்கு.

வலிய வீரவாகு மார்பில் பட்டு அவை
வலுவிழந்து கூர் மழுங்கி விழுந்தன!

வீரவாகு வீசிய வேற்படையால் – தன்
அறிவிழந்து நின்றான் தருமகோபன்.

கோடுகளால் தாக்கியது  வீரவாகுவை!
பொடியாக்கியது யானை அவர் தேரை!

துதிக்கையைக் கையால் பற்றி அறைய
தூக்கி எறியப்பட்டது யானை விண்ணில்.

விண்ணுலகம் வரை சென்று மீண்டும்
மண்ணுலகில் வந்து விழுந்தது அது.

மார்பில் விழுந்த ஒரு அறையால்
மண்ணில் விழுந்தான் தருமகோபன்.

கால்களால் வீரவாகு உதைக்கவும்
காலன் உயிரைப் பறித்துச் சென்றான்.

“திக்கு யானைகளில் நானும் ஒருவன்.
திக்கில்லாமல் இவனைப் பணிந்தேன்.

காவலில் சிறையில் இருந்தேன் நான்!
ஏவல்கள் செய்து திரிந்தேன் நான்.

என் தவறு என்று இங்கு எதுவுமில்லை.
என்னிடத்துக்கு என்னைச் செல்லவிடு!”

செய்தி போயிற்று சூரபத்ம அவுணனுக்கு.
செய்வது அறியாமல் மயங்கி நின்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#10b. The fall of Dharmagopan!

“Save yourself if you can! Dharmagopan taunted VeerabAhu. But his sharp arrows caused him shame since when they hit the strong body of VeerabAhu, they became useless and fell down without harming him in any way.

VeerabAhu aimed his spear on Dharmagopan and he just stood dazed. His elephant attacked VeerabAhu with its four tusks and damaged his chariot completely. VeerabAhu caught hold of its trunk and gave it such a hard slap that it flew very high in the sky and rough landed on the earth.

VeerabAhu hit Dharmagopan hard on his chest. The asura fell down and VeerabAhu kicked him to his death.

The elephant spoke with reverence now, “I am one of the eight elephants of the eight directions. I was forced to obey Soorapadman. I was imprisoned by him. I had to carry our his commands and obey him. Please let me go back to my place.”

The elephant was sent away. The news of the fall of Dharmagopan made Soorapadman  feel completely lost now.

Leave a comment

Leave a comment