13h. மாய வடிவங்கள்

பல் வேறு வடிவெடுத்து சூரபத்மன்
பார் வியக்கப் போர் புரிந்தான்!

திக்குகளை மூடி நின்ற உருவத்தை
அக்கணமே அழித்தான் ஆறுமுகன்.

நிலத்தையும், வானையும் இணைக்கும்
நீர் வடிவில் நிமிர்ந்து நின்றான் சூரன் .

நூறு தீக்கணைகளை முருகன் எய்யவே
நீர் வடிவம் நொடியில் மறைந்து போனது.

தீ வடிவெடுத்து நின்றான் சூரபத்மன்;
தீ வடிவை அழித்தது காற்றுக் கணை.

காற்றாக மாறி நின்றான் சூரபத்மன்;
காற்றை அழித்தது பாம்புக் கணை.

நான்கு நாட்கள் தொடர்ந்த போரில்
நானா வடிவங்கள் எடுத்தான் சூரன்.

அவுணர்கள் போல மாறி வந்தான்;
அமரர்கள் போலவும் மாறி வந்தான்;

யமன் போலவும், இந்திரன் போலவும்,
பேயைப் போலவும், தீயைப் போலவும்;

கடலைப் போலவும், காற்றைப் போலவும்,
இடியைப் போலவும்; இருளைப் போலவும்;

முகிலைப் போலவும், நஞ்சைப் போலவும்,
மலையை போலவும், தாரகன் போலவும்,

தீமுகன் போலவும், பானுகோபன் போலவும்,
திரிமூர்த்தி போலவும், தருமகோபன் போலவும்!

ஆறுமுகன் கணைகளைத் தொடர்ந்து செலுத்தி
அழித்துவிட்டான் அத்தனை மாயவடிவுகளையும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#13h. MAyA warfare of Soorapadman.

Soorapadman assumed various deceptive forms and fought with Murugan. He covered all the eight directions by assuming a huge form. Murugan’s arrow destroyed that huge form scaling the direction.

He stood as a giant water pillar from earth to the heaven. One hundred arrows of fire shot by Murugan dried up Sooran’s watery form. Now Sooran stood as a burning fire. The arrow of wind shot by Murugan destroyed the fire. Sooran became a strong wind. Murugan destroyed it with a snake asthra.

The war went on for four days. Soorapadman assumed many different forms and fought Murugan. He came changing himself as an asura, as s Deva, as Yama, as Indra, as a ghost, as fire, as wind, as a sea, as pitch darkness, as thunder bolts, as clouds, as poisons, as mountains, as TArakan, as Agnimukhan as BhaAnukoban, as thrimoorthis and also as Dharmagopan.

Murugan destroyed every one of these deceptive forms by shooting appropriate arrows.

 

Leave a comment

Leave a comment