12j. அரிமுகன் முடிவு

முளைத்தன மீண்டும் அறுக்க அறுக்க !
அளித்தன வியப்பை அரிமுகன் உறுப்புகள்!

ஓராயிரம் தலைகளும், ஈராயிரம் கரங்களும்
அறுக்கப்பட்டன ஆயிரத்து எட்டு முறைகள்.

நிலத்தில் அவன் கைகள் விழும் முன்னரே
முளைத்தன நீண்ட கரங்கள் மிக வேகமாக.

முளைத்த நீண்டகரங்களால் அரிமுகன் கீழே
விழுந்த கரங்களை எடுத்துப் போரிட்டான் .

ஆயிரம் கணைகளால் ஆயிரம் தலைகள்
அறுபட்ட போதும் மீண்டும் முளைத்தன.

வெட்டுண்ட உறுப்புக்கள் பறந்து திரிந்தன
விண்ணிலும், மண்ணிலும், திசைகளிலும்.

கண்டவர் மயங்கி விழுந்தனர் அச்சத்தால்!
கண்டு கொண்டான் கந்தன் ஓர் உபாயம்!

ஒரு சிரம்,  இரு கரம் தவிர்த்து விட்டு
பிற உறுப்புக்களை அறுத்தான் முருகன்!

முளைக்கத் தொடங்கிய புதிய உறுப்புகள்
முருகனின் அதட்டலால் அடங்கி விட்டன!

மீண்டும் முளைக்காத உடல் உறுப்புகளால்
மண்டியது சினம் அரிமுக அவுணனுக்கு.

முருகன் குலிசப் படையைப் பணித்தான்,
“அரிமுகன் உயிரை உண்டு வருவாய்!”

அறுமுகனின் குலிசம் விரைந்து சென்றது.
அரிமுகன் உயிரைக் குடித்து விட்டது.

தேவ கங்கையில் மூழ்கி எழுந்தது – பின்
தேவர்கள் மகிழ முருகன் கைசேர்ந்தது.

போரைப் பார்த்தபடி உயரே நின்றிருந்த
சூரபத்மன் மருண்டான் – தன் இளவல்

மயங்கினானா? அன்றி மாய்ந்தானா?
தயங்கி நின்றவனுக்குச் செய்தி வந்தது.

ஓலமிட்டுப் புலம்பினான் சூரபத்மன்
தாளமுடியாத துயரச் சுமையினால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#12j. The fall of Singamukhan.

The hands and heads which were cut off by Murugan grew back immediately on the asuran Singamukhan’s body. Murugan was surprised by this. The one  thousand heads and two thousand hands of Singamukhan were severed by Murugan one thousand and eight times!

But new heads and new hands grew back so fast that Singamukhan took the severed hands which had fallen down and fought using them as his weapons! The limbs cut off flew in the sky, over the land and in every possible direction, frightening the onlookers so that they fainted and fell down.

Murugan decided to put an end to this. He cut off all the heads but one and all the hands but two. When the new limbs tried to grow back, he made a threatening sound which put them out of action and they did not grow back again. Singamukhan became very angry now.

Murugan ordered his kulisam “Go forth and finish off Singamukhan!” His kulisam sped fast and killed Singamukhan. It went on to take a holy dip in the Deva Ganga and then returned to the hands of Murugan.

Soorapadman who was watching the fight from a high tower was confused as to whether his younger brother just fainted or fell dead. Then the messengers brought the bad news. He shed bitter tears unable to bear his sorrow.

 

Leave a comment

Leave a comment