13l. சேவலும், மயிலும்

அகன்ற தன் வடிவினை கர்வத்துடன்
அசைத்தது அந்த அதிசய மாமரம் !

நிலவுலகம் சரிந்தது, பின்னர் மறிந்தது,
நிலை தடுமாறின உலகத்து உயிர்கள்.

மாய மாமரமாகி நின்ற சூரபத்மனை
மாயோன் மருகனின் வேல் பார்த்தது.

விரைந்து சென்று தாக்கி அழித்தது.
அரற்றலோடு விழுந்தான் சூரபத்மன்.

சிவன் தந்த பல மேன்மைகளினால்
அவன் உயிருக்கு இல்லை ஆபத்து.

பழைய வடிவம் எடுத்துக் கொண்டான்
சுழற்றினான் சூரன் தன் உடைவாளை .

மீண்டும் தாக்கியது முருகனின் வேல்!
அண்டர்கோனை துண்டாக்கி விட்டது .

இரு கூறுகளும் விழுந்தன ஆழ்கடலில்.
திரும்பியது வேல் தேவகங்கையில் மூழ்கி!

மாளாத சூரன் எழுந்தான் மீண்டும்!
தாளாத செருக்குடன் திருமுன்பு வந்தான்!

சேவலும், மயிலுமாக அவன் மாறிவிட்டான்!
செவ்வேள் அருள் தந்தது தூய நல்லறிவினை.

“தேரில் சேவற் கொடியாக இருப்பாய் நீ !”
சேவலிடம் செவ்வேள் சொன்னான் இதை.

மயிலாக மாறியிருந்த இந்திரனை விடுவித்தான்
மயிலாக மாறியிருந்த சூரன் மீது அமர்ந்தான்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#13l. The rooster and the peacock.

The strange sprawling mango tree moved its branches. The world lost it balance and the living beings felt threatened. The spear saw the now transformed Sooran and attacked him again. He cried out in pain and fell down. Sooran did not die because of the boons showered on him by Siva.

He assumed his original form, grabbed his sword and came in front of Murugan. The spear attacked him again – this time tearing his body into two pieces. The torn body fell in the sea.

The spear took a holy dip in the Deva Ganga and returned to Murugan’s hands. Sooran was torn but not dead. He got up from the sea. But his body got transformed to a cock and a peacock.

Murugan ordered the cock, “Be on my flag !” He got down from the peacock which was Indra and climbed onto the back of the peacock which was Soorapadman.

(God’s aim is to kill only the pride, the ahankAram and the garvam to subdue them and not take out the life of the wrong-doers.)

 

Leave a comment

Leave a comment