13k. மீண்டும் போர்!

பழைய பகைமையும், சினமும் பிறந்தன!
பழைய ஊக்கமும், வீரமும் வளர்ந்தன !

“கள்ளன் என் மனத்தை மயக்கி விட்டான்!
கற்ற மாய வித்தையைக் காட்டி விட்டான்!

தேவர்களையும் வெல்வேன்! சிறுவனையும்!
தேவர்கள் கலங்கச் சூளுரைத்தான் சூரன்.

மாய மறையை ஓதினான் – இருண்ட
மாய வடிவினை எடுத்துக் கொண்டான்.

சிரங்கள், கரங்கள் பல கொண்டுள்ள
கோர வடிவுடன் சூரன் ஆர்ப்பரித்தான்.

விண்ணுக்கும், மண்ணுக்குமாக நின்று
உண்ண விரும்பினான் அமரர்களை.

கூரிய வேலிடம் கூறினான் குமரன்,
“சூரனின் மார்பைப் பிளந்து மீளுக!”

ஆயிரம் கோடி ஆதவர் ஒளியுடன்
ஆர்வத்துடன் விரைந்தது வேற்படை.

மாயை நீங்கியது இருள் விலகியது!
தீயைப் போன்ற செந்நிறத் தளிர்களும்;

பச்சை நிறத்தில் மெல்லிய காற்றில்
புகை போல் சலசலக்கும் இலைகளும்;

பொன் போன்ற மலர்க் கொத்துக்களும்;
விண்முகில் போன்ற பரந்த கிளைகளும்;

மரகத மணிப் பச்சையில் காய்களும்;
மாணிக்க மணிச் சிவப்பில் கனிகளும்;

நிறைந்த மாமர வடிவெடுத்தான் சூரன்.
நூறாயிரம் யோஜனை அகன்றிருந்தான் !

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#13k. The unusual mango tree!

Soorapadman became as arrogant, angry and valorous as before. He told to himself, “This boy confused my mind using his MAyA tricks! I will defeat all the Devas and this boy as well!”

Sooran chanted a mantra and assumed a huge dark form. He developed several hands and heads and stood scaling the sky. He wanted to grab and gobble the now tiny Devas. Murugan did not want to waste any more time. He ordered to his mighty spear “Go forth and tear open Soorapadman’s chest!”

The spear sped along emitting the light of a thousand crore suns shining together. The darkness disappeared. The delusion by MAyA was removed.

Now Sooran transformed himself into an unusual mango tree! The tender leaves of the tree were as red as the tongues of fire. The leaves were ever-rustling and resembled a green smoke. The flower bunches resembled the color of pure molten gold. The raw mangoes resembled the green emeralds. The ripe fruits of the tree were pure carbuncle. The tree was so huge that it measured one hundred yojanas across.

 

Leave a comment

Leave a comment