9a. மூவாயிரவர்

அழிந்தான் அக்கினி முகன் போரில்!
விழுந்தான் சூரபத்மன் ஆறாத்துயரில்!

கேட்ட மாத்திரத்தில் சூரனின் மகன்கள்
கோட்டையை அடைந்தனர் மூவாயிரவர்.

“நூறாயிரம் வீரர்களுடன் கூட  – ஒன்பது
பேராண்மையாளர்களும் வந்திருக்கையில்

தீ முகன் ஒருவனை மட்டும் போருக்கு
நீர் அனுப்பியது சரியா கூறும் தந்தையே!

வலிவுடையவனையும் ஒன்றாகி விட்ட
மெலிவுடையவர் வெல்வார் அன்றோ?

வருந்தி மனம் கலங்க வேண்டாம் நீ!
இருக்கின்றோம் இன்னமும் பல வீரர்.

எண்ணங்கள் நிறைவேற வேண்டுமா?
எங்களைப் போருக்கு நீர் அனுப்புவீர்.”

துன்பம் ஒழிந்தான் சூரபத்ம அவுணன்.
தன் மக்கள் மூவாயிரவர் மொழிகளால்.

புனைந்தனர் போர்க்கோலம் அனைவரும்;
பூண்டனர் அணிமணிகள், மலர் மாலைகள்.

கடல் என அரவம் எழுப்பி நடந்தது படை;
களத்தைச் சென்றடைந்தது வெகு விரைவில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#9a. The three thousand sons of Soorapadman.

The news that Agni Mukhan got killed in the battle shattered Soorapadman. His three thousand sons rushed to meet him on hearing this sad news. “One hundred thousand warriors and nine accomplished generals had come for the battle and yet you had sent Agni Mukhan alone to fight with them.

Even a valiant warrior will be defeated by the combined strength of the less valiant warriors. Do not worry now. We are still here and many more people are here too. Allow us to go to the battle. Surely we will make your dream come true”

Soorapadman got consoled to some extent. He allowed the three thousand sons to go to the battle. They got ready for the war front. They wore armors, garlands and marched to the battle field with a huge asura army.

Leave a comment

Leave a comment