13c. முருகனும், சூரனும்

முருகனின் திருவிளையாடல்களைக் கண்டும்
சிறுவனுடன் போர் விழைந்தான் சூரபத்மன்.

“சிவன் தந்த மேன்மை பெற்றவன் நான்!
நமன் கை வசப்படவே மாட்டேன் நான்!

தேவர்களும் அஞ்சுவர் போர் புரிவதற்கு!
தோற்றவர் என் எதிரே என்றுமே நில்லார்.”

கலந்தன படைகள்  இரு பெரும் கடலென!
தொடங்கியது போர்  அப் படைகளிடையே!

திடமான சூரன் வில் இரு துண்டானது
விடமுண்ட நாதன் தந்த வாள்வீச்சினால்!

வீரவாகு விழுந்தான் மார்பில் அடிபட்டு!
சூரபத்மன் எறிந்தான் அவனை விண்ணில்!

முருகன் அறுத்தான் சூரனின் கொடியை.
முருகன் தேரில் இல்லை ஒரு கொடியும்.

கொடியானான் அக்கினி முருகன் தேரில்.
கூவினான் அண்டம் ஒலிக்கச் சேவலாகி.

விண்ணிற் செலுத்தினான் சூரன் தன் தேரை.
விண்ணிற் செலுத்தினான் முருகன் தேரை.

சூரனின் தேரை அழித்தான் முருகன்;
சூரன் ஏறினான் தன் இந்திரஞாலத்தில்.

வாழ்க வளமுடன்,  விசாலாக்ஷி ரமணி.

4#13c. Murugan and Sooran.​

VeerabAhu faced Soorapadman. “I have been blessed by Siva himself. No one could kill me. Devas fear to fight with me. Those who got defeated will not stand in my presence.” Soorapadman boasted to VeerabAhu.

The war began. Soorapadman’s bow was broken by VeerabAhu using his sword given by Lord Siva. Soorapadman hit VeerabAhu on his chest and kicked him into the sky.

Murugan cut off the flag from Sooran’s chariot. There was no flag on Murugan’s chariot. Agni Devan became a cock, sat on the Chariot of Murugan and crowed very loudly.

Soorapadman rose in the sky along with his chariot. Murugan also rose in the sky along with his chariot. Murugan destroyed Sooran’s chariot. Immediately Sooran climbed into his other chariot IndrajnAlam.

 

Leave a comment

Leave a comment