8f. தம்பியரைத் தேடுதல்

பிரிந்து நின்று போர் புரிந்தவர்கள்
திரும்பி வந்தனர் வீரவாகுவிடம்.

வீரபுரந்தரர் மட்டும் வந்தார் – ஆனால்
வீரவாகு காணவில்லை மற்றவர்களை!

“ஏழு தம்பிகள் எங்கே?” என வினவவும்,
“எழுவரையும் கொன்றான் அக்கினிமுகன்

அரிய நூறு யோசனைக்கு அப்பால் உள்ள ஓர்
பெரிய ஆலமரத்தடியில்” என்றார் உக்கிரர்.

விக்கித்து நின்றார் வீரவாகுத் தேவர்;
உக்கிரரின் மொழிகளைக் கேட்டதும்.

ஆலமரத்தடியை  அடைந்தார் விரைந்து;
ஓலமிட்டு அழுதார் உடல்களைக் கண்டு.

அரற்றினார், புலம்பினார், தழுவினார்,
அரிய சினம் கொண்டார் கூற்றுவன் மீது.

கணையில் எழுதினர் கூற்றுவனுக்கு.
“இணையில்லாத செவ்வேளின் இளவல்

வீரவாகு ஆகிய நான் எமனுக்கு எழுதும்
ஓர் ஓலை இதுவே என்பதை அறிவாய்.

இளவல்களின் உயிரைக் கவர்ந்தாய்!
இளப்பமாக எண்ணாதே எங்களை!

உயிர்களைத் திருப்பிக் கொடு உடனே
உனக்கு உன் உயிர்  வேண்டும் என்றால்!”

வில்லில் அக்கணையைப் பூட்டினார்.
சொல்லரும் திறனுடன் செலுத்தினார்.

கடல்களை எல்லாம் கடந்து சென்றது.
மடல் விழுந்தது எமதர்மனின் முன்பு.

பொறித்திருந்த செய்தியைக் கண்டு
பெரிதும் அஞ்சினான்; துன்புற்றான்;

“இங்கு இல்லை அவர்கள் எழுவர்.
எங்கு உள்ளனர் ஏழு இளவல்கள்?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#8f. Searching for the missing brothers.

The army of demons which got separated while fighting, now returned to VeerabAhu. Veera Purandarar came alone and the other seven brothers were not to be seen. Ugrar told VeerabAhu that his seven younger brothers were killed by Agni Mukhan under a banyan tree a hundred yojanas away from there.

VeerabAhu stood shocked and then rushed to that spot. He lamented and cried on seeing his younger brothers quite dead. He became very angry with Yama. He wrote a message on his arrow demanding that the souls of his dead brothers be returned to their bodies immediately or else Yama would face dire consequences.

He shot the arrow with such a force that it reached the Yamalokam and fell in front of Yama himself. Yama read the message and shuddered. He knew that the seven brothers were nor in his world. But “Where were they?”

Leave a comment

Leave a comment