12d. அரிமுகன் வந்தான்

அவுணர் படையின் பின்னடைவால்
அரிமுகன் வந்தான் பூதப் படைமுன்.

எரி எழ மூச்சை உயிர்த்தான் அரிமுகன்.
எரிந்து போயின பூதர்களின் ஆயுதங்கள்.

மலைகள், மரங்களைப் பெயர்த்தனர்;
மலை போல நின்றவன் மீது வீசினர்.

கயிலையைச் சூழ்ந்த முகிலென அவை
பைய விழுந்தன பஞ்சுப் பொதி போல.

குதித்தான் அரிமுகன் நிலத்தில்;
குலுங்கியது பூமி அதிர்வுகளால்!

எற்றினான் பூதரைத் தேவருலகுக்கு;
எற்றினான் பூதரைக் கடல் நீருக்குள்.

எற்றினான் பூதரை நிலத்தின் மேல்.
எற்றினான் பூதரைத் திசைகள் தோறும்.

அள்ளினான்; தள்ளினான்; எற்றினான்;
உதைத்தான், மிதித்தான், நசுக்கினான்,

களைத்த பூதர்களை வலிமையால்
சளைக்காமல் அழித்தான் அரிமுகன்.

வாழ்க வளமுடன் , விசாலாக்ஷி ரமணி

4#12d. Singamukhan appears.

When the army of the asura suffered a set back, Singamukhan came to the war front. He breathed fire which destroyed all the armaments of the demons. They started throwing on him the uprooted trees and mountains. But he was so huge that these appeared as the clouds surrounding the mount KailAsh and fell down like balls of cotton without hurting him. He jumped down from his chariot. The earth shook under the impact.

He kicked the demons into the sky, into the sea, on the ground and in every direction. He picked them up in bunches, he threw them down, he kicked them, he stamped on them and crushed their bodies under his feet mercilessly. Thus he destroyed the army of the demons effortlessly.

 

Leave a comment

Leave a comment