12b. விண்ணப்பம்

அரிமுகன் போருக்கு வந்துள்ளதை
அறிந்து அஞ்சியது அமரர் கூட்டம்.

முருகக் கடவுளின் அருகே சென்று
உருகி விண்ணப்பித்தது ஒரே குரலில்.

“ஆயிரம் தலைகள் உடையவன் அவன்;
ஈராயிரம் கரங்கள் உடையவன் அவன்;

ஆயிரம் உலகங்களை வென்றவன் அவன்;
ஆயிரம் யோசனை உயரமானவன் அவன்.

மாயையில் தன்னிகர் அற்றவன் அவன்;
மனதில் வஞ்சனை நிறைந்தவன் அவன்.

உலகினை உண்டு உமிழ வல்லவன் அவன்;
உலகினை ஒரு கரத்தால் எடுத்தவன் அவன்.

கொடிய முச்சூலப் படையினன் அவன்;
நடக்கையில் கடலை நகர்த்துபவன் அவன்;

மேருவைக் கையில் எடுத்தவன் அவன்;
சூரபத்மனுக்கு இளைய அவுணன் அவன்.

ஆற்றலில் அண்ணனை மிஞ்சியவனைத்
தோற்கடித்து எம்மைக் காக்க வேண்டும்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#12b. The Devas pray to Murugan.

When the Devas learned that Singamukhan had come to the war front, they got scared and started running aimlessly. Then they went to Murugan and prayed to him in unison, “Singa mukhan has one thousand lion faces; He has two thousand strong hands; He had conquered one thousand worlds; He stands one thousand yojanas tall.

He excels in MAyA techniques and is very cunning as well as sharp. He had carried the world with one of his hands. He can swallow the whole world if he wishes to do so. He is armed with a terrifying trisoolam. When he walks the earth is shaken and the seas get displaced. He can pick up the mount Meru with one palm.

Though he is the younger brother, he is stronger than Soorapadman. Please defeat him in the war and save us!”

Leave a comment

Leave a comment