11a. சூரனும், மகனும்

தூதுவர்கள் சிலர் சென்றனர் மறுநாள்;
ஆதவனைச் சிறையிட்ட  அவுணனிடம்.

“மாயப் படை செலுத்தி மயக்கினாய் !
தோயக் கடலில் அவர்களை வீழ்த்தினாய் !

வேற்படை சென்றது ஆறு கடல் கடந்து;
வெற்றுப்படை ஆனது உன் மாயப் படை.

மீண்டு வந்தனர் மாண்ட பூதர்கள்,
ஈண்டு வந்து அழித்தனர் நம் நகரை!

சூரபத்மன் போருக்கு அனுப்பினான்
இரணியன், தீமுகன், மூவாயிரவரை.

படைகள் அழிந்தும் ஒழிந்தும் போயின
கடல் மீனாகி ஒளிந்தான் இரணியன்.

தருமகோபன், தீமுகன்  வீழ்ந்தனர் போரில் .
இருக்கிறார்கள் நம் பகைவர்கள் நம் ஊரில்!”

பானுகோபன் அதிர்ந்தான்; ஏங்கினான்;
பாரினில் நம் வாழ்வு முடியலாயிற்றோ?

தந்தையைக் காணச் சென்றான் அவன்;
நன்னெறிகள் பகன்றான் பானுகோபன்;

“நான் கூறும் சொற்களைச் செவிமடும்!
நன்னீர்க் கடலில் இட்டேன் பூதரை!

வேற்படை செலுத்தி மீட்ட சிறுவனைத்
தோற்கடிக்க இயலாது இனி எவராலும்.

முதல் நாள் போரில் அஞ்சிப் புறமுதுகிட்டு
புகல் தேடி ஓடி வந்தது யார் என்று கூறும்!

தாரகனையும், கிரௌஞ்சனையும் வென்ற
பேராண்மையாளனை எவர் வெல்லுவார்?

ஆறுமுகன் இளவல்களில் சிறந்தவனான
வீரவாகுவைக் கூட நாம் வெல்ல இயலாது.

அமரரைச் சிறை விட்டு விடும் உடனே !
ஆறுமுகன் படை சென்றுவிடும் உடனே !

பெரும் வளங்களுடன் அவுணர்கள் குலம்
பெருவாழ்வு வாழ வழி செய்வீர் தந்தையே! ”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

4#11a. Soorapadman and BhAnukoban.

On the next day some messengers went to BhAnukoban. They spoke to him in detail.“You shot the MAya astram and threw the demon warriors in the fresh water sea. Murugan’s spear went all the way and brought back all the demon warriors after destroying the power of your MAyA.

The demon warriors destroyed our city. HiraNyan was sent to fight Murugan’s army. He changed into a fish and went into hiding after being defeated. Agni mukhan and the three thousand sons of Soorapadman fell in the war. The enemies are still in our city.”

BhAnukoban stared worrying, “Has my life come to its end?” He rushed to meet his father and advised him thus. “I threw the demon warriors in to the sea but Murugan’s spear saved them and brought them back alive and safe. Murugan is invincible. We can’t win even VeerabAhu or any of his brothers. Please release the Devas from your  prison. Let our race go on living in peace and prosperity for a very long time!”

 

Leave a comment

Leave a comment