14. தேவர்கள் புகழ்ச்சி

சூரனின் ஆணவத்தை அடக்கி யவனை
ஊர்தியும் கொடியும் ஆக்கியவனை
பணிந்து தொழுதது பூதர் கூட்டம்.
பணிந்து தொழுதது அமரர் கூட்டம்.

“கார்தடிந்து துய்க்கும் கனைகடலின் நீர்வறப்பப்
போர்தடிந்து செல்லும் புகர்வேல் தனைவிடுத்துச்
சூர்தடிந்தாய் அன்றே தொழும்அடியேம் வல்வினையின்
வேர்தடிந்தாய் மற்றேமக்கு வேறோர் குறையுண்டோ ?

மாறுமுகங் கொண்டுபொரும் வல்லவுணர் மாளாமல்
நூறுமுகம் எட்டு நோதக் கனபுரியத்
தேறுமுகம் இன்றித் திரிந்தேமை ஆளுவன்றோ
ஆறுமுகங் கொண்டே அவதரித்தாய் எம்பெருமான்.

நீதி முறையதனில் நில்லா அசுரர்புரி
தீது பலவுளவுந் தீர்ந்தோம் பழியகன்றோம்
வேத நெறிதொல்லை வெறுக்கையோடு பெற்றனமால்
ஏதும் இலையால் எமக்கோர் குறைஎந்தாய்.

மன்ற அவுணர் வருத்திடஇந் நாள்வரையும்
போன்றி னவரென்னப் புலம்பித் திரிந்தனமால்
இன்று பகை மாற்றி எமக்கருள் நீ செய்கையினால்
சென்ற உயிர்மீண்ட திறம்பெற் றனம்ஐயா.”

4#14. Praising Murugan!

The Devas and demons worshiped and praised Murugan for destroying the pride of Soorapadman and making him his own vahanam and flag.

Leave a comment

Leave a comment